

சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது.
சென்னையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,150-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
20-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200
19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080
18-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080
17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200
20-07-2026- ஒரு கிராம் ரூ.235
19-07-2026- ஒரு கிராம் ரூ.235
18-07-2026- ஒரு கிராம் ரூ.235
17-07-2026- ஒரு கிராம் ரூ.235
16-07-2026- ஒரு கிராம் ரூ.240