GOLD PRICE TODAY: நகைப்பிரியர்களுக்கு ஷாக்... மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

இன்று காலையில் தங்கம், வெள்ளியின் விலை உயரவில்லை.
gold
Published on

காலையில் உயராத தங்கத்தின் விலை மாலையில் கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.280-ம், பவுனுக்கு ரூ.2,240-ம் எகிறியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 480-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 840-க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.270-ம் பவுனுக்கு ரூ.2,160-ம் அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,750-க்கும் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக் கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை

இன்று காலை தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை இந்த மாதத்தில், அதாவது கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரையில் கிராமுக்கு ரூ.530-ம், பவுனுக்கு ரூ.4,240-ம் அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை

தங்கம் விலையை போல வெள்ளி விலையும் ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.240-க்கும் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனையான நிலையில் நேற்று கிராமுக்கு ரூ.10-ம் கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் அதிகரித்து ஒரு கிராம் ரூ.250-க்கும் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

வெள்ளி விலையும் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும் ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாலையில் உயர்ந்த தங்கம்

இந்நிலையில், இன்று மாலை ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாயும், சவரனுக்கு 1,200 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 13,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,11,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று மாலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும் ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com