GOLD PRICE TODAY : இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?

ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம்
தங்கம்
Published on

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

தங்கம் விலை கடந்த 27-ந்தேதி வரை குறைந்து வந்து, அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 215-க்கும் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 155-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை உயர்வு

இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,230-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

29-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,240

28-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,720

27-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960

26-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

25-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

28-07-2026- ஒரு கிராம் ரூ.235

28-07-2026- ஒரு கிராம் ரூ.235

27-07-2026- ஒரு கிராம் ரூ.240

26-07-2026- ஒரு கிராம் ரூ.240

25-07-2026- ஒரு கிராம் ரூ.240

X

Maalai Malar
www.maalaimalar.com