

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
இதனால் தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 135-க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 80-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,150-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080
18-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080
17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200
15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440
19-07-2026- ஒரு கிராம் ரூ.235
18-07-2026- ஒரு கிராம் ரூ.235
17-07-2026- ஒரு கிராம் ரூ.235
16-07-2026- ஒரு கிராம் ரூ.240
15-07-2026- ஒரு கிராம் ரூ.240