

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.11 உயர்த்தப்பட்டு புதிய விலை அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் செலவுகள் சற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த மாதத்திற்கான புதிய விலை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னையில் தற்போது வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ கியாஸ் சிலிண்டர் விலை ரூ.11 அதிகரித்து, ரூ.3,016.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திடீர் விலை உயர்வு ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், பொதுமக்கள் அதிகம் எதிர்பார்த்த வீட்டு உபயோகத்திற்கான 14 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த மாதத்தைப் போலவே தற்போதும் வீட்டு உபயோக சிலிண்டர் பழைய விலையான ரூ.957.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நடுத்தரக் குடும்பத்தினரும் இல்லத்தரசிகளும் பெரிய அளவில் நிம்மதி அடைந்துள்ளனர். வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ள போதிலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாறாமல் இருப்பது பொதுமக்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.