குஜராத்தில் அனாதையாக நின்ற பாகிஸ்தான் படகுகள் பறிமுதல்

குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அனாதையாக நின்ற 2 பாகிஸ்தான் படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் இன்று பறிமுதல் செய்தனர்.
பாகிஸ்தான் படகை சோதனையிடும் வீரர்கள்
பாகிஸ்தான் படகை சோதனையிடும் வீரர்கள்
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் சர்வதேச கடல் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வழக்கமான கண்காணிப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த 2 படகுகள் அனாதையாக நின்று கொண்டிருப்பதை கண்டனர்.

உடனடியாக அந்த படகுகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் மீன்பிடிக்க தேவையான வலைகள் உள்ளிட்ட பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. ஆனால் படகுகளில் யாரும் இல்லை.

இதையடுத்து, கடலோர காவல் படையினர் இரண்டு மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com