பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு

குஜராத் மாநிலத்தின் கடல் பகுதியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரு ஆளில்லா மீன்பிடி படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் சிறைபிடித்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது குச் மாவட்டம். கடலோர மாவட்டமான இதன் அருகில் ‘ஹராமி நாலா’ கடற்கழிமுக பகுதி உள்ளது.

இந்த பகுதியில் இன்று எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரு மீன்பிடி படகுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அதன் அருகில் சென்று சோதனை செய்தனர். படகுகளில் ஆட்கள் யாரும் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்தன.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரு மீன்பிடி படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் இன்று காலை கைப்பற்றியுள்ளனர். இரு படகுகளுமே ஒரே ஒரு எஞ்ஜின் பொருத்தப்பட்டவை. சந்தேகப்படும் படியான எவ்வித பொருட்களும் அதில் இல்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com