பிரதமர் மோடியுடன் எடியூரப்பா 6ம் தேதி சந்திப்பு

கர்நாடகா முதல் மந்திரியாக பொறுப்பேற்றபின்னர் 6-ம் தேதி டெல்லி செல்லும் எடியூரப்பா, அங்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

கர்நாடகா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

முதல் மந்திரியாக பதவியேற்ற நிலையில், கடந்த வாரம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் மந்திரி எடியூரப்பா வெற்றி பெற்றார். இதையடுத்து கர்நாடகா மாநிலத்தில் நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர், எடியூரப்பா வரும் 6ம் தேதி டெல்லி செல்கிறார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com