பிரதமர் மோடியுடன் எடியூரப்பா சந்திப்பு

கர்நாடகா முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் டெல்லி சென்ற எடியூரப்பா, அங்கு பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
பிரதமரை சந்தித்த எடியூரப்ப
பிரதமரை சந்தித்த எடியூரப்ப
Published on

புதுடெல்லி:

கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக பா.ஜ.க. மாநில தலைவர் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

முதல் மந்திரியாக பதவியேற்ற நிலையில், கடந்த வாரம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் மந்திரி எடியூரப்பா வெற்றி பெற்றார். இதையடுத்து கர்நாடகா மாநிலத்தில் நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. 

இதற்கிடையே, முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் எடியூரப்பா டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தலைநகர் டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவிக்காத நிலையில், பிரதமர மோடியை இன்று எடியூரப்பா சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com