பிரிட்டன்: விமான நிலையத்தில் மர்மப்பை கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு

பிரிட்டனின் லிவர்போல் விமான நிலையத்தில் சந்தேகப்படும் வகையிலான மர்மப்பை கண்டெடுக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பிரிட்டன்: விமான நிலையத்தில் மர்மப்பை கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு
Published on

லண்டன்:

பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடும் தீவிரவாத அச்சுறுத்தல் நிலவுகிறது. பல நாடுகளில் வாகனங்களை மக்கள் மீது மோதவிட்டு அல்லது கத்தி போன்ற ஆயுதங்களால் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், முக்கியமான இடங்களில் கூடுதலான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனின் முக்கிய நகரமான லிவர்போலில் உள்ள விமான நிலையத்தில் நேற்று சந்தேகப்படும் வகையிலான மர்மப்பை கண்டெடுக்கப்பட்டது. பரபரப்பான விமான நிலையத்தில் இது போன்ற பை கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, விமான நிலையத்தின் வழக்கமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

ஆனால், அந்த பையில் குண்டுகள் எதுவும் இல்லை என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைக்கு பின்னர் தெரிவித்தனர். இதன் பின்னர், விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியது. 

X

Maalai Malar
www.maalaimalar.com