

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி. மு.க. கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக தொகுதியில் கூட்டணி கட்சியினருடன் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
ராமநாதபுரம் பெரிய பட்டினத்தில் இன்று நயினார் நாகேந்திரன், அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் வேனில் நின்றபடி பிரசாரம் செய்தனர். அப்போது மாடியில் நின்று கொண்டிருந்தவர்களில் யாரோ சிலர் பாட்டிலை வீசினர். அந்த பாட்டில் நயினார் நாகேந்திரன் அருகே நினறு கொண்டிருந்த திருப்புல்லாணி அ.தி.மு.க. அவைத்தலைவர் உடையத்தேவர் தலையில் விழுந்தது. படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பிரசாரத்தில் பாட்டில் வீசப்பட்டது குறித்து திருப்புல்லாணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.