குர்திஷ் போராளிகள் தாக்குதல்: துருக்கியில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

துருக்கியில் குர்திஷ் போராளிகள் நடத்திய தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குர்திஷ் போராளிகள் தாக்குதல்: துருக்கியில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
Published on


அங்காரா: 

ஈராக்கின் வடபகுதிக்கு சுயஆட்சி உரிமை கோரி போராடிவரும் குர்திஷ்தான் பிரிவினைவாதிகள், அந்நாட்டின் அரசுப் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக் மற்றும் துருக்கி நாடுகளுக்கான எல்லைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ள குர்திஷ் போராளிகள், அவ்வப்போது துருக்கியின் எல்லையோர பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

இந்நிலையில், துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹக்காரி மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட யூக்செகோவா மாவட்டத்தில் குர்திஷ் போராளிகள் (குர்திஷ் தொழிலாளர் கட்சி) இன்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்பகுதியில் தாக்குதல் நடத்திவரும் குர்திஷ் அமைப்பினரை பிடிக்க வந்த ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மேலும் ஐந்து பேர் இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com