

சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைப்பதற்கும், அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய வைர விழா கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கும் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். சென்னை வரும் மோடிக்கு கருப்புக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும், விமான நிலையம் முற்றுகையிடப்படும் என பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் தெரிவித்திருந்தனர்.
இதனால் சென்னை விமான நிலையத்திற்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பையும் மீறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விமான நிலையத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினார்கள். விமான நிலையத்தில் விளம்பர பேனர் வைக்கும் கம்பத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையம் எதிரே போராட்டம் நடத்திய எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அமீர், பாரதிராஜா உள்ளிட்டோர் விமான நிலையத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.