பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் மத்திய மந்திரி மீதான தாக்குதலை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ மீதான தாக்குதலை கண்டித்து பா.ஜ.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ நேற்று மாலை சென்றார். வளாகத்தில் நுழைந்த அவரை கண்டித்து அங்கிருந்த மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீது தாக்குதல் நடத்தி சிறை பிடித்தனர்.

இதையடுத்து, மாநில கவர்னர் அங்கு விரைந்து சென்று மத்திய மந்திரியை மீட்டு தனது காரில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ மீதான தாக்குதலை கண்டித்து கொல்கத்தாவில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சயந்தன் பாசு மற்றும் ராஜு பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் இடதுசாரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மாணவர் அமைப்பினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com