

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பிரதமர் நரேந்திர மோடியை
துரியோதனனுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா பதிலடி
கொடுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் திஷ்னுபூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட
அமித்ஷா இதுபற்றி கூறியதாவது:-
பிரியங்கா வத்ரா பிரதமர் மோடியை துரியோதனன் என்று கூறியுள்ளார். பிரியங்கா,
இது ஜனநாயகம். நீங்கள் சொல்லிவிட்டதாலேயே யாரும் துரியோதனன் ஆகிவிட
முடியாது. மே 23-ந் தேதி யார் துரியோதனன், யார் அர்ஜுனன் என்பது நமக்கு
தெரிந்துவிடும். ராஜீவ் காந்தி ஆட்சியில் நடைபெற்ற போபர்ஸ் வழக்கு பற்றி
பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?