

ஐதராபாத்:
அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி. ஐதராபாத் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.
இவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி. தெலுங்கானா மாநிலம் சந்திராய குட்டா தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) எதிராக செயல்படும் ஒவைசி சகோதரர்களை கொல்வோம் என்று தெலுங்கானா மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜாசிங் கூறியுள்ளார்.
சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக மக்கள் பிரச்சினை செய்வது ஏன்? இந்திய முஸ்லிம்களுக்கு இது அச்சுறுத்தல் இல்லை. ஊடுருபவர்களை வெளியேற்றவே இது கொண்டு வரப்படுகிறது. இதை நான் தெளிவுப்படுத்துகிறேன்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக செயல்படும் ஒவைசி சகோதரர்களுக்கு முடிவு கட்டுவோம். நாட்டின் பாதுகாப்புக்காக அவர்களை 5 நிமிடத்தில் முடிப்போம்.
நான் மதசார்பற்றவன் அல்ல. நான் ஒரு இந்துத்துவா வாதி. இந்தியா இந்து ராஜ்ஜியமாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜாசிங்கின் இந்த பேச்சு வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது பேச்சை நியாயப்படுத்தி உள்ளார்.
அக்பருதீன் ஒவைசி 2013-ம் ஆண்டு இந்துக்களை கொல்வதாக மிரட்டினார். அதற்குதான் நான் தற்போது பதிலடி கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.