மகாராஷ்டிரா சட்டசபை இடைக்கால சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
காளிதாஸ் கொலம்ப்கர்
காளிதாஸ் கொலம்ப்கர்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று காலை உத்தரவிட்டது.

பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடும் நெருக்கடி ஏற்பட்டதால் மகாராஷ்டிர துணை முதல் மந்திரி பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, தேவேந்திர பட்னாவிசும் முதல் மந்திரி பதவியி ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஆளுநர் மாளிகை சென்று பதவியேற்க உள்ள காளிதாஸ், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் நாளை பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com