திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் - கருத்து கணிப்புகளில் தகவல்

3 மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய நடந்த கருத்து கணிப்பில் திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் - கருத்து கணிப்புகளில் தகவல்
Published on

புதுடெல்லி:

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 3-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. 3 மாநிலங்களிலும், தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. எனவே, ஆட்சி அமைக்க, குறைந்தபட்சம் 31 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். 3 மாநிலங்களிலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நேற்று நடத்தப்பட்டது.

இதில், ஜங்கிபாட்-நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்து கணிப்பில், திரிபுராவில் பா.ஜனதா கூட்டணி 35 முதல் 45 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 14 முதல் 23 தொகுதிகளே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆக்சிஸ்மை இந்தியா என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில், பா.ஜனதா கூட்டணிக்கு 44 முதல் 50 தொகுதிகளும், சிஓட்டர் கருத்து கணிப்பில், பா.ஜனதா கூட்டணிக்கு 24 முதல் 32 தொகுதிகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நாகாலாந்திலும், பா.ஜனதா கூட்டணி 32 இடங்கள்வரை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேகாலயாவில், எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com