மாயாவதி தினமும் ‘டை’ அடித்து முகத்தில் பவுடர் பூசி கொள்கிறார்- பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை

அழகாக தோன்றுவதற்காக மாயாவதி தினமும் ‘டை’ அடித்து முகத்தில் பவுடர் பூசி கொள்வதால் அவரது தோற்றம் எடுபடவில்லை என்று பா.ஜனதா தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #mayawati #bjp
மாயாவதி தினமும் ‘டை’ அடித்து முகத்தில் பவுடர் பூசி கொள்கிறார்- பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை
Published on

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் பரியா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு பா.ஜனதா சார்பில் தேர்வானவர் சுரேந்திரசிங். இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் பல்லியா என்ற ஊரில் பேசும்போது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை மிக கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:-

மாயாவதி தன்னை அழகாக காட்டிக்கொள்ள விரும்புகிறார். தினமும் அவர் தலைக்கு டை அடிக்கிறார்.

அது மட்டுமல்ல தன்னை பிரகாசமாக காட்டிக் கொள்வதற்காக முகத்தில் அதிகளவு பவுடர் பூசுகிறார். அழகாக உடை உடுத்தலாம் தவறு இல்லை. ஆனால் 60 வயதுக்கு பிறகு இளமையாக தோன்றுவதற்காக இப்படியா பவுடர் பூசுவது?

அவர் அடிக்கும் டை தலைமுடியை கறுப்பாக காட்ட வேண்டும். ஆனால் அந்த டை கலர் கிரேயாக மாறி விடுகிறது. இதனால் அவரது தோற்றம் எடுபடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் இந்த கருத்துக்கு உத்தரபிர தேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்கை கண்டித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பதிவாகி வருகின்றன. #mayawati #bjp

X

Maalai Malar
www.maalaimalar.com