மகாராஷ்டிராவில் துணிகரம் - பாஜக தலைவர் உள்பட 5 பேர் கொடூர தாக்குதலில் பலி

மகாராஷ்டிராவின் ஜல்காவில் பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை நடத்தும் போலீசார்
விசாரணை நடத்தும் போலீசார்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்காவ் நகரில் பூஷவால் பகுதியில் வசித்து வந்தவர் பா.ஜ.க. உள்ளூர் தலைவர் ரவீந்திரா காரத். நேற்று இரவு இவரை வீட்டுக்கு வெளியே வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிகளால் சுட்டனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் வெளியே வந்தனர்.  இதில் அவரது குடும்பத்தினர் 3 பேர் மற்றும் அவரது மகனின் நண்பர் என 5 பேர் துப்பாக்கிகளால் சுடப்பட்டனர்.  அதன்பின்பும் ஆத்திரம் தீராமல் அவர்கள் மீது ஆயுதங்களால் கொடூர முறையில் தாக்குதல் நடத்தி அனைவரையும் கொன்று விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ஜ.க. உள்ளூர் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 5 பேர் மர்ம நபர்களால் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com