வைகோ உருவ பொம்மையை எரித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

மோடியை தரக்குறைவாக பேசியதாக வைகோ உருவ பொம்மையை எரித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வைகோ உருவ பொம்மையை எரித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
Published on

திரு.வி.க.நகர்:

பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய வைகோவை கண்டித்து சென்னை பெரம்பூரை அடுத்த பெரவள்ளூர் அகரம் சந்திப்பில் நேற்று மாலை பா.ஜனதா வடசென்னை மாவட்ட இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்தையா சிவா தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் செல்வநாதன் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள், வைகோ உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். தீயை போலீசார் அணைக்க முயன்றதால், பா.ஜனதாவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com