குஜராத், கர்நாடகாவுக்கு பா.ஜனதா பொறுப்பாளர்கள் நியமனம் - அமித்ஷா அறிவிப்பு

சட்டசபை தேர்தலை முன்னிட்டு குஜராத், கர்நாடகாவுக்கு மாநில பொறுப்பாளர்களை பா.ஜனதா அறிவித்து உள்ளது.
குஜராத், கர்நாடகாவுக்கு பா.ஜனதா பொறுப்பாளர்கள் நியமனம் - அமித்ஷா அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

குஜராத்தில் தற்போதைய அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 22-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதைப்போல கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 28-ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே இந்த இரு மாநிலங்களிலும் முறையே இந்த ஆண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தல்களுக்கு கட்சியை தயார்படுத்தும் வகையில் மாநில பொறுப்பாளர்களை பா.ஜனதா அறிவித்து உள்ளது. அதன்படி குஜராத் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியும், கர்நாடகாவுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நியமனங்களை கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மேற்கொண்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com