பா.ஜ.க.வின் யோகா தினம் விளம்பரத்திற்காகவே, பீகார் அரசு பங்கேற்காது: நிதிஷ் குமார்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விளம்பரத்திற்காகவே சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதால் அதில் பீகார் அரசு பங்கேற்காது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் யோகா தினம் விளம்பரத்திற்காகவே, பீகார் அரசு பங்கேற்காது: நிதிஷ் குமார்
Published on

பாட்னா:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முயற்சியால் சர்வதேச யோகா தினம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பா.ஜ.க. அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது. அதேபோல், இந்த வருடமும் சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விளம்பரத்திற்காகவே சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதால் அதில் பீகார் அரசு பங்கேற்காது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் யோகாவிற்கு எதிரானவன் அல்ல. ஆனால், விளம்பரத்திற்காக செய்வதை விரும்பவில்லை. நானும் யோகா செய்கிறேன். ஆனால் அதனை விளம்பர படுத்தவில்லை” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com