பீகார் இடைத்தேர்தல் - ஆராரியா, பபுவாவில் பா.ஜ.கவும், ஜகானாபாத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் முன்னிலை

பீகாரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆராரியா மக்களவை தொகுதி மற்றும் பபுவா சட்டசபை தொகுதியில் பாஜகவும், ஜகானாபாத் சட்டசபை தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் முன்னிலை பெற்றுள்ளன. #Biharbypoll
பீகார் இடைத்தேர்தல் - ஆராரியா, பபுவாவில் பா.ஜ.கவும், ஜகானாபாத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் முன்னிலை
Published on

பாட்னா:

பீகாரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆராரியா மக்களவை தொகுதி மற்றும் பபுவா சட்டசபை தொகுதியில் பாஜகவும்,  ஜகானாபாத் சட்டசபை தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் முன்னிலை பெற்றுள்ளன. #Biharbypoll

பீகாரில் ஆராரியா மக்களவை தொகுதி மற்றும் ஜகானாபாத், பபுவா ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11 தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா கூட்டணி மற்றும் கூட்டணி எதிர்க்கட்சிகளான ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

ஆராரியா பாராளுமன்ற தொகுதியில் 57 சதவீதமும், ஜெஹானாபாத் சட்டமன்ற தொகுதியில் 50.56 சதவீதமும், பபுவா சட்டமன்ற தொகுதியில் 54.3 சதவீதமும் வாக்குகளும் பதிவாகின என பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஜய் நாயக் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த மூன்று தொகுதி இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

முதல் இரண்டு சுற்று முடிவுகளின் படி, அராரியா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரதீப் சிங் குமார் 2321 வாக்குகள் வித்தியாசத்திலும், பாபுவா சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் ரிங்கி ராணி 2729 வாக்குகளும், ஜெஹானாபாத் சட்டசபை தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வேட்பாளர் சுதய் யாதவ் 1200 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை வகிக்கின்றனர் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Biharbypoll #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com