

பீகார் மாநிலத்தில் இரு தினங்களுக்கு முன் ‘பிளஸ்-2’ தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் கலைப்பிரிவில் கணேஷ் குமார் என்ற மாணவர் 82.6 சதவீத மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். இசைப் பாடத்திற்கான செய்முறைத் தேர்வில் 70-க்கு 65 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வில் 30-க்கு 18 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இந்தி பாடத்தில் 100-க்கு 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆனால், செய்தி தொலைக்காட்சியில் அவர் பேசியபோது, இசை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் சொதப்பலாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய பீகார் மாநில பள்ளிகள் தேர்வு வாரியம், கணேஷ் குமாரின் தேர்ச்சியை இன்று ரத்து செய்தது.
அத்துடன், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ் குமாரை கைது செய்தனர்.