பீகார்: நாளந்தாவில் பேருந்து தீ பிடித்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் பேருந்து தீ பிடித்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீகார்: நாளந்தாவில் பேருந்து தீ பிடித்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் பேருந்து தீ பிடித்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பேருந்து தலைநகர் பாட்னாவில் இருந்து ஷேக்புரா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. 

நாளாந்தா மாவட்டத்தின் ஹர்ட் பகுதியில் நிகழ்ந்த இந்த பேருந்து தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது. 

தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஷ்வகர்மா சவுக் என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக ஹர்னட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

எஞ்சினில் பிடித்த தீயானது மளமளவென பேருந்து முழுவதும் பரவியதாகவும், சுமார் 10 பேர் இந்த விபத்து உயிரிழந்திருக்க கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com