பசுவை பூஜிப்பவர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்: மோகன் பகவத் பேச்சு

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், பசுவை பூஜிப்பவர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
பசுவை பூஜிப்பவர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்: மோகன் பகவத் பேச்சு
Published on

ஜெய்ப்பூர்:

சமீப காலமாக பசு இறைச்சியை கொண்டு செல்வோர் மீது பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சிலர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிலர் கொல்லப்ப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற நடவடிக்கைக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், சில இடங்களில் இதுபோன்ற தாக்குதல் தொடர்ந்து வருகிறது.   

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஜெய்ப்பூரின் ஜம்டோலி பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், ‘மக்கள் பசுக்களை பக்தியுடன் பூஜித்து வருகின்றனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை விரும்ப மாட்டார்கள்’ என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com