

வத்தலக்குண்டு:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு யசோதா என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவரது கணவர் முருகேசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராவார். தற்போது இந்த பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதால் மனைவியை தேர்தலில் நிறுத்தி பிரசாரம் செய்தார். இதற்காக அப்பகுதியில் ஓட்டு கேட்க சென்றுள்ளார்.
அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மயக்கமடைந்தார். இதனால் அதிச்சி அடைந்த அவரது ஆதரவாளர்கள் வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மற்ற வேட்பாளர்களும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.