இரட்டை குடியுரிமையுடன் தேர்தலில் போட்டி: ஆஸ்திரேலிய துணை பிரதமர் பதவி நீக்கம்

ஆஸ்திரேலிய துணை பிரதமர் பார்னாபை ஜோய்ஸ் இரட்டை குடியுரிமை வைத்திருந்து தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காக அவரை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமையுடன் தேர்தலில் போட்டி: ஆஸ்திரேலிய துணை பிரதமர் பதவி நீக்கம்
Published on

கான்பெர்ரா:

ஆஸ்திரேலிய அரசின் துணை பிரதமராக பதவிவகித்து வருபவர் பார்னாபை ஜோய்ஸ். நியூசிலாந்து நாட்டின் குடியுரிமை வைத்துள்ள இவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றதாக வழக்கு தொடரப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டின் சட்டப்படி இரட்டை குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

ஜோய்ஸ் மட்டுமல்லாமல் இதே குற்றச்சாட்டின் கீழ் 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் ஜோய்ஸ் உள்ளிட்ட மூவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதில், ஜோய்ஸ் துணை பிரதமராகவும், மற்ற இருவர்கள் செனட் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.

இவர்கள் தவிர்த்து குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் ஏற்கனவே தனது பதவியை ஜூலை மாதம் ராஜினாமா செய்து விட்டனர். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com