பர்கூர் அருகே விபத்தில் தச்சு தொழிலாளி பலி

பர்கூர் அருகே விபத்தில் தச்சு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

பர்கூரை அடுத்த காளிக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ஷேக்தஸ்தகீர் (வயது 42). தச்சு தொழிலாளியான இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளிக்கோவில் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com