மாணவர்களின் செல்போன்களை பறித்து தீவைத்து எரித்த மதராசா நிர்வாகம்

வங்காளதேசம் நாட்டில் உள்ள மதராசாவில் பயிலும் மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செல்போன்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
மாணவர்களின் செல்போன்களை பறித்து தீவைத்து எரித்த மதராசா நிர்வாகம்
Published on

டாக்கா:

வங்காளதேசம் தலைநகர் டாக்கா பகுதியில் 123 வருடம் பழையான மதராச கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கல்வி நிறுனத்தில் 14,000 பேர் படித்து வருகின்றனர். இங்கு, மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள விடுதியில் தங்கி பயிலும் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களின் செல்போன்களை பறித்த மதராசா நிர்வாகம், அதனை இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி எரித்தனர்.

தொழில் நுட்பத்திற்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை என தெரிவித்துள்ள மதராசா நிர்வாகம் செல்போன்களால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் எதிர்மறைவாக வருகிறது என கூறியுள்ளனர்.

குறிப்பாக செல்போனில் இசை, வீடியோக்கள் பார்ப்பதால் அவர்களது திறன் குறைந்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையின் போது அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படுவதாக கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com