அய்யம்பேட்டையில் ஓட்டல் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

அய்யம்பேட்டையில் ஓட்டல் ஊழியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யம்பேட்டையில் ஓட்டல் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது
Published on

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் சாம்பசிவம் மகன் இளையபாரதி (வயது 28). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இளையபாரதி அய்யம்பேட்டை மதகடி பஜாரில் நின்றிருந்தபோது அங்கு வந்த அதே தெருவைச் சேர்ந்த முத்து (23), விஜய் (18), கரண் (22) ஆகிய 3 பேரும் அவரை கல்லால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த இளையபாரதி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து இளையபாரதி சகோதரர் குபேரன் அளித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முத்து, விஜய், கரண் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com