லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது

அய்யலூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

அய்யலூர் பகுதியில் வடமதுரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்கம்மாபட்டி பஸ் நிறுத்தம் மற்றும் அய்யலூர் மேம்பாலத்தின் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட மணப்பாறை பாத்திமாநகரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 35), கொம்பேறிபட்டியை சேர்ந்த ராஜரத்தினம் (60), மம்மானியூரை சேர்ந்த வெள்ளைச்சாமி (45), பாலத்தோட்டத்தை சேர்ந்த நாகராஜ் (46), ஆண்டிவேல் (24) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3,200, 125 லாட்டரி சீட்டுகள், ஒரு மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com