

சென்னை:
அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கடந்த 21ந்தேதி ரவுடி சங்கரை பிடிக்க முயன்றபோது, அவர் காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் ஆய்வாளர் நடராஜன் சுட்டுக்கொன்றார். என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
ரவுடியை என்கவுண்டர் செய்த விவகாரத்தில் தொடர்புடைய 4 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் ஆய்வாளர் நடராஜன், கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் உள்பட 7 பேருக்கு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் இன்று கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ராஜா, அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட 7 போலீசாரும் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.