ஆட்டோ கட்டணம் குறித்து அமைச்சர் ஷாஜகான் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஆட்டோ கட்டணத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தலைமை செயலக கருத்தரங்கு அறையில் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆட்டோ கட்டணம் குறித்து அமைச்சர் ஷாஜகான் தலைமையில் ஆலோசனை கூட்டம்
Published on

புதுச்சேரி:

புதுவையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆட்டோ கட்டணத்தை போக்குவரத்துதுறை நிர்ணயித்துள்ளது.

ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு 6 மாத காலத்துக்கு மேல் ஆகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதை நடைமுறைப்படுத்த கோரி அரசியல் கட்சியும், சமூக நல இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆட்டோ கட்டணத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தலைமை செயலக கருத்தரங்கு அறையில் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடந்தது. இதில், அன்பழகன் எம்.எல்.ஏ., போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கவாஸ், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஆட்டோக்களில் 6 பள்ளி மாணவர்களை மட்டுமே ஏற்ற வேண்டும், மினி வேனில் அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லக்கூடாது, பிரிப்பெய்டு ஆட்டோ கட்டண முறையையும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட ஆட்டோ கட்டண முறையையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

விரைவில் ஆட்டோ கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com