

இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் ஆக்ரோஷமான அணுகுமுறையை தேவை என்று தலைமை பயிற்சியளார் டேரன் லீமேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டேரன் லீமென் கூறுகையில் ‘‘நாங்கள் உலகக்கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். டெஸ்ட் போட்டியில் என்ன நடக்கிறது என்பதை சார்ந்து அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. டெஸ்ட் போட்டியில் இருந்து டெஸ்ட் அல்லாத போட்டிக்கு சென்று கொண்டிருக்கிறோம். உண்மையிலேயே நாங்கள் டெஸ்ட் போட்டி மீதுதான் கவனம் செலுத்தினோம்.
இதனால் நாங்கள் ஒருநாள் போட்டிக்கான அணியை தயார் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னும் 6 மாதங்களில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்துதான் சரியான அணியை தேர்ந்தெடுக்க முடியும்.
நீண்ட டெஸ்ட் தொடருக்குப்பின் தற்போது டி20 தொடரில் ஆஸ்திரேலியாவின் செயல்பாடு, அணியின் உருவாக்குவதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளது. துடிப்பான வீரர்கள் அணிக்கு வந்துள்ளனர். தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்குப்பின் உட்கார்ந்து இதுகுறித்து பேசுவோம். ஆனால், உலகக்கோப்பைக்கான அணியை தயார் செய்யும் நோக்கத்துடன்தான் சென்று கொண்டிருக்கிறோம்.