

சேதராப்பட்டு:
வானூர் அருகே நாராயணபுரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது34). சம்பவத்தன்று இவர் ஆரோவில் அருகே கோட்டக்கரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது 2 பேர் வழிமறித்து ராஜாவிடம் இருந்த ரூ.2 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து ராஜா அந்த வழியாக ரோந்து வந்த ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரையும் தேடினர். அப்போது ஆரோவில் பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.
அப்போது போலீசாரின் பிடியில் இருந்து ஒருவன் தப்பி ஓடிய போது தடுமாறி விழுந்ததால் அவனுக்கு கைமுறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கூனிமேடு குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் (18) மற்றும் மணி (17) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கார்த்திகேயனை கடலூர் ஜெயிலில் அடைத்தனர். மணிக்கு 17 வயதே ஆவதால் அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.