ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள், தலிபான் பயங்கரவாதிகள் மோதல் - 6 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தாக்குதல்
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆப்கானிஸ்தானுக்கு பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தான் அரசும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர தீவிரம் காட்டி வருகின்றன.

அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாதம் தலீபான் பயங்கரவாதிகள் இருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் இந்த அமைதி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

மாறாக ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பர்யாப் மாகாணத்தில் ராணுவ வீரர்களுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்புக்கும் இடையே பல மணிநேரம் கடுமையான சண்டை நடந்தது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com