சியரா லியோன்: கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் பலி

மேற்கு ஆப்ரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 179 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சியரா லியோன்: கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் பலி
Published on

மேற்கு ஆப்ரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 179 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஆப்ரிக்க நாடான சியரா லியோனில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால், அந்நாட்டின் தலைநகரில் உள்ள மலைப்பகுதியில் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சுமார் 2000 க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பலியானவர்களில் 179 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com