டி.ஆர். காங்கோவில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி 15 பேர் பலி

டி.ஆர்.காங்கோ நாட்டில் தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
லாரி மோதியதால் சேதமடைந்த வாகனம்
லாரி மோதியதால் சேதமடைந்த வாகனம்
Published on

மாஸ்கோ:

மத்திய ஆப்பிரிக்க நாடான டி.ஆர்.காங்கோ நாட்டின் தலைநகர்  கின்ஷாசாவில் நேற்று ஒரு லாரி கற்களை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, சாலையில் சென்ற வாகனங்கள் மற்றும் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. பின்னர் சாலையோரம் உள்ள கட்டிடத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கின்ஷாசாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை மந்திரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com