ஆப்கானிஸ்தான்: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அரசு அதிகாரிகள் வசிக்கும் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான்: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அரசு அதிகாரிகள் வசிக்கும் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வசிர் அப்கர் கான் பகுதி உள்ளது. இங்கு வெளியுறவு துறை மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த பகுதியில் எப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.

இந்நிலையில், இந்த பகுதியில் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிமருந்துகளை நிரப்பியபடி இந்த பகுதியில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினான்.

இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த போலீசார் உள்பட 13 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்களை சக போலீசார் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த மே மாதம் காபுலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கு மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com