அமைச்சரவைக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்: புதுச்சேரி தலைமைச் செயலர் மாற்றம்

புதுச்சேரி தலைமைச் செயலாளர் மனோஜ் பாரிதா அமைச்சரவைக்கு ஆதரவாக செயல்படுவதாக கிரண்பேடி புகாரளித்த நிலையில், அவர் அதிரடியாக மாற்றப்பட்டு அப்பதவிக்கு அஷ்வின் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவைக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்: புதுச்சேரி தலைமைச் செயலர் மாற்றம்
Published on

புதுச்சேரி:

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில், தலைமைச் செயலாளராக இருந்து வந்த மனோஜ் பாரிதா அமைச்சரவைக்கு ஆதரவாக செயல்படுவதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அனுப்பினார்.

இந்நிலையில், மனோஜ் பாரிதா அதிரடியாக மாற்றப்பட்டு அந்த பதவிக்கு அஷ்வின் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வளர்ச்சி ஆணையர் நரேந்திர குமாரும் மாற்றப்பட்டு அந்த பதவிக்கு அன்பரசுவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு அதிகார மையங்களுக்கு இடையே பணியாற்றுவது கடினமாக இருந்ததால் இடமாற்றுதலுக்கு விண்ணப்பித்ததாக மனோஜ் பாரிதா கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com