சட்டசபை தேர்தல் பாதுகாப்பு : சென்னைக்கு, ரெயிலில் வந்த துணை ராணுவ வீரர்கள்

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து, சி.ஐ.எஸ்.எப். துணை ராணுவ வீரர்கள் 92 பேர் ரெயிலில் சென்னை வந்தனர்.
துணை ராணுவ வீரர்கள்
துணை ராணுவ வீரர்கள்
Published on

சென்னை:

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 4,500 துணை ராணுவ வீரர்களை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. அதன்படி துணை ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் முதல் தினமும் தமிழகம் வந்தபடி உள்ளனர். நேற்று கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து, சி.ஐ.எஸ்.எப். துணை ராணுவ வீரர்கள் 92 பேர் ரெயிலில் சென்னை வந்தனர். பெட்டி, படுக்கைகளுடன், கையில் எஸ்.எல்.ஆர்.நவீன துப்பாக்கிகளுடன் அவர்கள் வந்திருந்தனர்.

இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் வந்த அவர்கள் 2 பஸ்களில் ஏறி கிருஷ்ணகிரி சென்றனர். அவர்களில் பலர் நன்கு தமிழ் பேச தெரிந்தவர்களாக இருந்தனர். ஏற்கனவே பல முறை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்துள்ளதாக அவர்களில் பலர் கூறினார்கள். 2 மாதங்கள் கிருஷ்ணகிரியில் தங்கி இருக்கப்போவதாகவும், நாங்களே சமைத்து சாப்பிடுவோம், என்றும் அவர்கள் தெரிவித்தனர். சுற்றுலா வந்தவர்கள் போல, உற்சாகமாக அவர்கள் காணப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com