உ.பி: அனல் மின்சார நிலைய கொதிகலன் வெடித்து 5 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள தேசிய அனல் மின்சார நிலையத்தின் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 4 தொழிலாளர்கள் பலியானதுடன் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
உ.பி: அனல் மின்சார நிலைய கொதிகலன் வெடித்து 5 பேர் பலி
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல் மின்சார நிலையம் உள்ளது. இன்று பிற்பகலில், இந்த ஆலையில் உள்ள கொதிகலன் ஒன்று திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com