அசோக் நகரில் மதுபோதையில் மயங்கி விழுந்தவர் மரணம்

அசோக் நகரில் மதுபோதையில் மயங்கி விழுந்தவர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

போரூர்:

அசோக் நகர் அம்பேத்கர் குடியிருப்பைச் சேர்ந்தவர் உசேன் (வயது 55). தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். இவர் நேற்று இரவு அதிகமாக மது அருந்தி வீட்டில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக உசேனை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உசேன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com