

அதன்பின் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக செயல்பட்டார். 2018 சீசனில் ஆர்சிபி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி உள்பட அனைவரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் ஆன கேரி கிர்ஸ்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்தது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் தான் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், கேரி கிர்ஸ்டனுடன் இணைந்து தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட போவதாக ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.