அரவிந்தர் சிங் லவ்லி மீண்டும் காங்கிரசில் இணைந்தார்

கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து விலகிய டெல்லி முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி இன்று மீண்டும் கட்சியில் இணைந்தார். #ArvindLovely #Congress
அரவிந்தர் சிங் லவ்லி மீண்டும் காங்கிரசில் இணைந்தார்
Published on

ஷீலா தீட்சித் தலைமையிலான டெல்லி மந்திரிசபையில் முன்னர் மந்திரியாக பொறுப்பு வகித்த அரவிந்தர் சிங் லவ்லி, சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

பின்னர், பா.ஜ.க.வில் இணைந்த அவர் இன்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் மற்றும் மேலிட தலைவர் பி.சி.சாக்கோ முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார்.

இந்த இணைப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங்கிரசில் இருந்து முன்னர் விலகியது மிகவும் வேதனைக்குரிய முடிவு என்பதை பின்னர் உணர்ந்து கொண்டேன். என்னுடைய சித்தாந்தங்களுடன் பா.ஜ.கவில் நீடிக்க முடியாது என்பதால் நாட்டின் மிகப்பழமையான காங்கிரஸ் கட்சியில் இன்று மீண்டும் இணைந்து விட்டேன் என குறிப்பிட்டார். #ArvindLovely #Congress #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com