

புதுடெல்லி:
டெல்லி முதல் மந்திரியாக 3-வது முறையாக பதவி ஏற்ற பிறகு கெஜ்ரிவால் பேசியதாவது:-
டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்தான். டெல்லியின் மகன் முதல்-மந்தியாக பதவி ஏற்றுள்ளதால் மக்கள் கவலைப்பட தேவையில்லை. இது எனது வெற்றி அல்ல மக்களாகிய உங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
டெல்லியின் வளர்ச்சிக்காக நான் பாடுபட்டேன். கட்சி, மதம், சாதி பாகுபாடு பார்க்காமல் 5 ஆண்டுகள் அனைவருக்காகவும் பாடுபட்டேன்.
டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன்.
வாழ்க்கையில் அத்தியாவசியமானவை அனைத்தும் இலவசமே, டெல்லியில் நேர்முறை அரசியலை முன்னெடுத்து செல்வேன். மத்திய அரசுடன் இணைந்து டெல்லியை நம்பர் ஒன் நகரமாக மாற்றுவேன்.
மோடியின் ஆசியுடன் நல்ல முறையில் ஆட்சியை கொண்டு செல்வேன். மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மருத்துவத்திற்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க மாட்டோம்.
இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.