வீட்டில் தனியாக இருந்த கள்ளக்காதலிக்கு மிரட்டல்- வாலிபர் கைது

மதுரையில் வீட்டில் தனியாக இருந்த கள்ளக்காதலியை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

மதுரை:

மதுரை மாவட்டம் பால மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரமோகன். இவரது மனைவி சர்மிளா (வயது 35). திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருக்கும் சர்மிளாவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த சர்மிளாவின் கணவர் பிரபாகரமோகன் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் பாலமுருகன் பாலமேட்டில் உள்ள சர்மிளாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதில் பாலமுருகனுக்கும் சர்மிளாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வீட்டில் சர்மிளா தனியாக இருந்தபோது பாலமுருகன் அங்கு வந்து தகராறு செய்து மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சர்மிளா பாலமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com