தி.மு.க.வினர் கைதை கண்டித்து மு.க.ஸ்டாலின் நாளை ஆர்ப்பாட்டம்

குட்கா ஆலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாளை முகஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
தி.மு.க.வினர் கைதை கண்டித்து மு.க.ஸ்டாலின் நாளை ஆர்ப்பாட்டம்
Published on

கோவை:

கண்ணம்பாளையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குட்கா ஆலையில் வெளிப்படையான சோதனை நடத்தக்கோரி ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. நிர்வாகிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கில் கார்த்திக் எம்.எல்.ஏ.வை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நாளை(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

இதற்காக மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் முலம் காலை 7.20 மணிக்கு கோவை வருகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து தி.மு.க.வினர் கலந்து கொள்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com